Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Tue, 08 Sept 2020 5:11:51 PM

வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

convection,heavy rain,chennai meteorological center,weather ,வெப்பச்சலனம்,கனமழை,சென்னை வானிலை ஆய்வு மையம்,வானிலை

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :