Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 15 Nov 2022 10:55:50 AM

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை, அதிக கன மழை பெய்து வருகிறது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து கொண்டு வருகிறது

இதனை அடுத்து மயிலாடுதுறையில் வரலாறு காணாத வகையில் அதிக கனமழை பெய்து உள்ளதால் அம் மாவட்டம் வெள்ளக்காடாக இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் .

heavy rain,chennai , கனமழை,சென்னை

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளம் அதிகம் பாதித்த சீர்காழி, தங்கம் பாடி பகுதி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் வங்கக்கடலில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், 19ஆம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் தெரிவித்திருக்கிறது

Tags :