Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 01 Sept 2022 09:43:13 AM

கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


கேரளா: கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை பெய்ய தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பருவ மழை மிக தீவிரமடைந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாகவே கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. கனமழை காரணமாக கேரளா மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

இதை அடுத்து பல் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rain,kerala ,கனமழை,கேரளா

மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர் மழை காரணமாக மாநிலங்களில் பல இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும்.

எனவே அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 நாட்கள் கன மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :