Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா மாநிலத்தில் 5 நாட்களுக்கு பலத்த கனமழைக்கு வாய்ப்பு

கேரளா மாநிலத்தில் 5 நாட்களுக்கு பலத்த கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 08 July 2022 4:46:36 PM

கேரளா மாநிலத்தில் 5 நாட்களுக்கு பலத்த கனமழைக்கு வாய்ப்பு

கேரளா: மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கேரளா மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மலையோரம் உள்ள மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

heavy rain,kerala ,கனமழை,கேரளா

மேலும், கேரளா மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வெள்ள பெருக்கில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தொடர் கனமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள வீடுகள் இடிந்து, மண்சரிவில் சிக்கி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் மண்சரிவில் சிக்கி ஆறு பேர் பலியாகி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :