Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஆகஸ்ட் 18,19,20,21,22 (5 நாட்கள்) கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 18,19,20,21,22 (5 நாட்கள்) கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 18 Aug 2022 5:07:30 PM

தமிழகத்தில்  ஆகஸ்ட் 18,19,20,21,22 (5 நாட்கள்)  கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து கொண்டு வருகிறது.

எனவே அதன்படி இன்று (ஆகஸ்ட் 18) மற்றும் ஆகஸ்ட் 19,20,21,22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

heavy rain,meteorological department ,கனமழை , வானிலை ஆய்வு மையம்

மேலும் 18.08.2022: டெல்டா மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, தேனி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்றும் வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

Tags :