Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி, திண்டுக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 05 Aug 2022 09:09:24 AM

தேனி, திண்டுக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக கோவை, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கனமழைக் காரணமாக கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தேனி, திண்டுக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

heavy rain,honey,dindigul ,கனமழை,தேனி, திண்டுக்கல்,

இதை அடுத்து கோவை வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுகிறது.

எனவே இந்த கனமழையினாலும், கோவை வால்பாறை பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்படைந்துள்ளது. மேலும், மேட்டூர் அணை நிரம்பி வழிவதால், காவிரி கரையோரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|