Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Tue, 04 Aug 2020 1:10:53 PM

அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலவும் வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழையும், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

weather,heavy rain,mountains,southwest monsoon,temperature ,வானிலை,கனமழை,மலைப்பகுதி,தென்மேற்கு பருவக்காற்று,வெப்பநிலை

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :