Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ,சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ,சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

By: vaithegi Sat, 30 July 2022 4:56:35 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில்  வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ,சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

உத்தரகாண்ட் : நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கணிசமாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முதல் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் டேராடூன், நைனிடால், தெஹ்ரி, பவுரி, சம்பவத், சாமோலி, பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

heavy rain,uttarakhand,orange alert ,கனமழை,உத்தரகாண்ட் ,ஆரஞ்சு எச்சரிக்கை

மேலும் கனமழை காரணமாக பத்ரிநாத் NH-7 இன் ஒரு பகுதி, லம்பகாட்டில் அமைந்துள்ள கச்டா வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வெள்ளத்தால் நெடுஞ்சாலையின் இருபுறமும் பக்தர்கள் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த 4-5 நாட்களுக்கு மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்வும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Tags :