Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 07 July 2023 12:14:02 PM

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

heavy rains,nilgiris,coimbatore ,கனமழை,நீலகிரி, கோவை

மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று (ஜூலை 6) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ. கனமழை பதிவாகியுள்ளது. முந்தைய நாளில் 18 செ.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :