Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

By: Nagaraj Fri, 20 Nov 2020 09:07:49 AM

கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்ட மக்களே கவனம்... தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைஅடுத்து தென்மாவட்ட மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்கிழக்கு அரபிக்கடலில் சமீபத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது. இதனால் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

southern district,thunder,lightning,weather,research center ,தென் மாவட்டம், இடி மின்னல், கனமழை, வானிலை, ஆய்வு மையம்

அதே போல் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய இருப்பதால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :