Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 31 May 2023 3:25:14 PM

இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதல் வெப்ப சலனத்தின் காரணத்தினால் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு ...தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தில் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது.

ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருவதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

heavy rain,weather center ,கனமழை,வானிலை மையம்

மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வந்தாலும் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வழக்கமான வெப்பநிலையை காட்டிலும் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

மேலும், இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :