Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழைக்கு வாய்ப்பு

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 19 Aug 2022 2:47:31 PM

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது.

இதை அடுத்து இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மட்டுமே இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

heavy rains,tamil nadu,puduwai,karaikal ,கனமழை, தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

அதன் படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :