Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் முக்கிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் முக்கிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 09 Sept 2022 1:09:35 PM

ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் முக்கிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

இந்தியா: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்ய துவங்கியுள்ளது.மேற்கு மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தான் இந்த முறை எப்போதும் பெய்யும் கனமழையின் அளவினை விட அதிகமாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அதன்படி, அடுத்து வரும் நாட்களில் கனமழை பரவலாக பல்வேறு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் கோராபுட், கந்தமால், காஞ்சாம் மற்றும் கஜபதி போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

heavy rain,jharkhand,odisha ,கனமழை,ஜார்கண்ட், ஒடிஷா

இதை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி மாவட்டங்களில் தான் அதிகமான மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் முக்கிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

இதனால் வங்க கடலோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம் மற்றும் சரைகேலா-கார்ஸ்வான் மாவட்டங்களில் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :