Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 01 Aug 2022 1:42:24 PM

கேரளாவில்  4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

கேரளா: கடந்த 2 வாரங்களாகவே கேரளாவின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதத்தன் பேரில், மாநிலத்தின் காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மேலும் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை குஜராத் வரையிலான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

heavy rain,kerala ,கனமழை ,கேரளா

இதை அடுத்து கர்நாடகாவிலும் மழை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் வியாழன் வரை 4 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்து ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய தொடர்ச்சியான கனமழை எதிர்பார்க்கப்படுவதால், சில பகுதிகளில் குறைந்த தீவிரம் கொண்ட திடீர் வெள்ளம் ஏற்படலாம், என IMD எச்சரித்து உள்ளது. மேலும் கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளது/

Tags :