Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 31 Aug 2022 3:32:06 PM

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

இதை அடுத்து நீலகிரி, கோவை, தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு . திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

heavy rains,nilgiris,coimbatore,theni,tenkasi , கன மழை,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி

இதை தொடர்ந்து நாளை (1-ந்தேதி) முதல் 4-ந்தேதி வர பல இடங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலும் லேசாக மழை பெய்தது. புறநகர் பகுதியில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டு வருகிறது.

Tags :
|