Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 29 Dec 2022 2:47:03 PM

இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு .... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31.12.2022 முதல் 02.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.

rainy,south tamil nadu districts ,மழை , தென் தமிழக மாவட்டங்கள்

அதனைதொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இதையடுத்து மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|