Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 30 Nov 2022 2:38:24 PM

தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை : இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ..... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,tamil nadu,puduvai,karaikal ,மழை,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

மேலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் வரும் 4-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது

அதனைத்தொடர்ந்து அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|