Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 01 Oct 2022 4:02:05 PM

இன்று தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌  லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, இருப்பத்தூர்‌, சேலம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ இன்று (அக்.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து நாளை (02.10.2022) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதில் நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,tamil nadu,puduvai,karaikal ,மழை,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌

இதையடுத்து அக். 03 முதல் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌.

மேலும் நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ எனவும் அறிவித்துள்ளது.

Tags :
|