Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 21 Jan 2023 2:36:22 PM

இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்பு ...... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்புள்ளது.

rainy,tamil nadu,puduvai,karaikal ,மழை,தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்

மேலும், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 23 முதல் 25-ம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|