Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தென் தமிழக மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று தென் தமிழக மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 24 Jan 2023 09:14:22 AM

இன்று தென் தமிழக மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிக இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.26ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

rainy,south tamil nadu districts , மழை,தென் தமிழக மாவட்டங்கள்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இந்நிலையில் ராமநாதபுரம் , தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|