Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 12 July 2023 09:59:30 AM

தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் 17.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

tamil nadu,puducherry,karaikal,rain , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் ,மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 15ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது

Tags :