Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 25 May 2023 10:14:50 AM

தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக, இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகிற 27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal , மழை,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

மீனவர்களுக்கான எச்சரிக்கையில் நாளை முதல் 28.05.2023 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.05.2023 மற்றும் 28.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Tags :
|