Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வருகிற ஏப்.26-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற ஏப்.26-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 23 Apr 2023 10:50:19 AM

தமிழகத்தில் வருகிற ஏப்.26-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24, 25-ஆம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களிலும், ஏப்ரல் 26-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

rain,thunder,lightning , மழை,இடி, மின்னல்

இதையடுத்து ஏப்.22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கரூர் மாவட்டம் பாலவிடுதி, கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி, சேலம், மதுரையில் 104, திருச்சி, கரூர் பரமத்தியில் 103, வேலூர், நாமக்கல்லில் 102, தஞ்சாவூரில் 101, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Tags :
|