Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுவை ,காரைக்காலில் ஆகஸ்ட் 12 வரை ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை ,காரைக்காலில் ஆகஸ்ட் 12 வரை ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 10 Aug 2022 3:32:41 PM

தமிழ்நாடு, புதுவை ,காரைக்காலில் ஆகஸ்ட் 12 வரை ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து கொண்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 10) மற்றும் ஆகஸ்ட் 11,12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று (ஆக. 10) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

tamil nadu,puduwai,karaikal,moderate rain ,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌, மிதமான மழை

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 10.08.2022, 11.08.2022, 12.08.2022 ஆந்திர கடலோரப்‌ பகுதிகள் மற்றும்‌ அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

இதனை தொடர்ந்து மேலும், குமரிக்கடல்‌ பகுதிகள் , மன்னார்‌ வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரளா – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதை ஒட்டிய தென் கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Tags :