Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 05 Nov 2022 3:49:10 PM

தமிழகத்தில்  நாளை அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு ..... நாளை (நவ.06) தமிழகத்தில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும் அதை அடுத்து கடலூர்‌, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை போன்ற மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது,

இதனை அடுத்தாக நவ.7,8,9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிஒிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

rainy,chennai , மழை,சென்னை

மேலும் நவ. 8ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலின்‌ வட மேற்கு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌. அதே போல நவ.9 அன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும்.

அதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் நவ.9ம் தேதி இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌. இது தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில்‌ அடுத்த 48 மணி நேரத்தில்‌ நகரக்கூடும்‌ எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|