Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வரும் 3 தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 3 தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 31 Oct 2023 10:56:48 AM

தமிழகத்தில் வரும் 3 தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக். 31,வருகிற நவ.1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், 2, 3 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

director,rainfall,chennai meteorological centre ,மழை,சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்

மேலும் இன்று, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனை அடுத்து வருகிற 3-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என அந்த செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :