Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Sat, 15 Oct 2022 4:52:46 PM

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு... வங்கக் கடலில் தென் ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்கள் கானமலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர்.

expected,lightning,rains,tamil nadu coastal ,காற்றழுத்த, தமிழக கடலோரம், தென் ஆந்திரா, வங்கக் கடலில்

சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

Tags :
|