Advertisement

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By: Nagaraj Fri, 23 Sept 2022 6:43:25 PM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை; வானிலை மையம் தகவல்... தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்.27-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

rain,chance,thunder,lightning,weather,observatory ,மழை, வாய்ப்பு, இடி, மின்னல், வானிலை, ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|