Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Sat, 26 Sept 2020 5:15:45 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 16 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

tamil nadu,pondicherry,rain,weather,heat ,தமிழகம்,புதுச்சேரி,மழை,வானிலை,வெப்பசலனம்

மேலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 10 செ.மீ., தேவகோட்டையில் 9 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|