Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

By: Monisha Tue, 08 Dec 2020 08:34:03 AM

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் உருவான புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது.

புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

tamil nadu,pondicherry,rain,weather,atmospheric cycle ,தமிழகம், புதுச்சேரி,மழை,வானிலை,வளிமண்டல சுழற்சி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
|