Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 16 May 2023 4:55:03 PM

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு

சென்னை : மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும் சென்னை, வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

rainfall,puducherry,karaikal ,மழைப்பொழிவு ,புதுச்சேரி ,காரைக்கால்

இதனை அடுத்து இன்று முதல் வருகிற மே 20ம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் எனவும், இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று மற்றும் நாளை தெற்கு அரபிக் கடலின் மத்திய பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது

Tags :