Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 11 June 2023 4:34:46 PM

தமிழ்நாட்டில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளைதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதேபோன்று வருகிற 13.06.2023 முதல் 15.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain,heat,chennai ,மழை ,வெப்ப சலனம் ,சென்னை

இதனை அடுத்து தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|