Advertisement

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 18 Nov 2022 10:22:44 AM

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: மிதமான மழைக்கு வாய்ப்பு ..... இந்த ஆண்டுக்காக வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

அதைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

rainy,chennai , மழை,சென்னை

இதையடுத்து இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை ,மேலும் 20 ஆம் தேதி கனமழை ,வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் ,தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது.


Tags :
|