Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Mon, 27 July 2020 4:12:24 PM

வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

மிதமான மழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை போன்ற 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

fishermen,rainfall,weather,report,southwest ,மீனவர்கள், மழை பெய்ய, வானிலை, அறிக்கை, தென்மேற்கு

மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உள் மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தென்மேற்கு அரபிக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

நேற்று நீலகிரி , ராமநாதபுரம் மற்றும் பல இடங்களில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|