Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

இன்றும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 10 Oct 2022 2:58:48 PM

இன்றும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை தகவல் மையம் அறிக்கை வெளியிட்டது.

இதனை அடுத்து இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.இதையடுத்து நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும் எனவும், கோவை,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி,தென்காசி ஆகிய பகுதிகளிலும்

rainy,tamil nadu,karaikal,puduvai ,மழை ,தமிழ்நாடு, காரைக்கால் ,புதுவை

மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், கடலுார், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags :
|