Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 13 Aug 2023 10:27:13 AM

தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainfall,chennai meteorological centre ,மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

தென்கிழக்கு வங்கக் கடல்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :