Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

By: vaithegi Thu, 23 June 2022 5:29:56 PM

தமிழகத்தில்  இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

சென்னை : கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, 23.06.2022, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும், 25.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 26.06.2022, 27.06.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

weather center,rain,chennai ,வானிலை மையம்,மழை ,சென்னை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

23.06.2022, 24.06.2022: குமரிக்கடல்‌ பகுதி, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடகா மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags :
|