Advertisement

அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 07 Mar 2023 3:09:00 PM

அடுத்த 4 நாட்களுக்கு மழை  பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் தற்போது மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலை வழக்கத்தை விட உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 1 வாரமாகவே லேசான மழை பெய்து கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

rainy,southern districts ,மழை  ,தென் மாவட்டங்கள்

அதே போன்று பிப்ரவரி 8,9 ,10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல காரைக்கால் பகுதியில் இன்னும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த 248 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
|