Advertisement

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 03 Dec 2022 6:19:14 PM

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: மழைக்கு வாய்ப்பு ... தமிழகம் முழுவதும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக இந்த வாரத்தின் தொடக்கம் முதல் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதை தவிர டிசம்பர் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, டிசம்பர் 7ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும், காரைக்கால்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மற்றும்‌ நாகப்பட்டினம்‌ ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,tamil nadu,new ,மழை,தமிழ்நாடு, புதுவை

மேலும், நாளை முதல் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று டிசம்பர் 7ம் தேதி வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் மீனவர்கள் நாளை முதல் 7ம் தேதி வரை குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|