Advertisement

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 06 Apr 2023 3:27:48 PM

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. மேலும் அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பநிலையானது 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி உருவாகக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,tamil,puducherry,karaikal , மழை,தமிழகம், புதுச்சேரி ,காரைக்கால்

இதை தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 7, 8-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வருகிற ஏப்ரல் 9,10ம் தேதிகளில் உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை

Tags :
|
|