Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: Monisha Tue, 21 July 2020 2:54:56 PM

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர பகுதிகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

tamil nadu,weather,rainy,cloudy,fishermen ,தமிழ்நாடு,வானிலை,மழை,மேகமூட்டம்,மீனவர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 23ம் தேதி வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும், 24 ஆம் தேதி வரை கேரள கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|