Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

By: Nagaraj Tue, 29 Sept 2020 09:15:24 AM

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலிருந்து இன்று முதல் விலக தொடங்குகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

15 districts,rain,notice,thunder,weather ,15 மாவட்டங்கள், மழை, அறிவிப்பு, இடி, வானிலை

கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை பதிவாகக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|