Advertisement

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 29 Jan 2023 10:08:07 AM

தமிழ்நாட்டில் இன்று  7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மழைக்கு வாய்ப்பு ...... வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக்கூடும்.

நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.

raini,villupuram,cuddalore,mayiladuthurai,nagai,tiruvarur,tanjore,pudukottai ,மழை,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை

அதன் பிறகு தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 31 அன்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01-02-2023 இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என கூறியிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|