Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வரும் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Thu, 09 Mar 2023 9:31:17 PM

வரும் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வரும் 10ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக மார்ச் 8 முதல் 10 வரை தென்கிழக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

temperature,rainfall,chennai,met office,notification ,வெப்ப நிலை, மழை, சென்னை, வானிலை மையம், அறிவிப்பு

மார்ச் 11 ஆம் தேதி தென்கிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 12 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Tags :