Advertisement

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 07 Nov 2022 4:35:37 PM

தமிழகத்தில் இன்று  பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .... இன்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால், அடுத்த 8 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

rainy,chennai , மழை,சென்னை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இன்று ( நவ. 7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
|