Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 19 Mar 2023 11:15:48 AM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளி மண்டல கீழடுக்கு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக அரியலூர், கரூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

அதேபோன்று சென்னையில் 3-வது நாளாக இன்றும் லேசான மழை தொடர்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தற்போது மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

எனவே அதன்படி சென்னையில் வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

rain,chennai,thiruvallur,kanchipuram ,மழை,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் போன்ற 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக பெய்துவரும் மழையால், கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags :
|