Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 23 July 2023 10:41:07 AM

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் ...... சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு
திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால்,

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை அடுத்து நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

coimbatore,nilgiris,rain , கோவை, நீலகிரி , மழை

அதைத்தொடர்ந்து வருகிற ஜூலை 24, 25-ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களிலும், தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வருகிற ஜூலை 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான
மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :