Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 19 July 2023 10:30:54 AM

தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 24ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

rainy,puducherry,tamil nadu ,மழை,தமிழ்நாடு , புதுச்சேரி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|