Advertisement

இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 10 Apr 2023 3:58:37 PM

இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று நாளை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,southern districts ,மழை,தென் மாவட்டங்கள்

மேலும் வருகிற 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|