Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 16 July 2023 12:18:29 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கேரளாவில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து வட மற்றும் தென் மாநிலங்களிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹரியானா, இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,tamil,new ,மழை ,தமிழகம் ,புதுவை

இதனை அடுத்து அதன் படி இன்று முதல் வருகிற ஜூலை.21ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கி. மீ வேகத்தில் வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|
|